புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் எஸ்.எஸ்.ஐ கணேசன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கறம்பக்குடியைச் சேர்ந்த ஐயப்பன்(25) என்பவர் அந்தப் பகுதி வழியாக டூவிலரில் சென்றுள்ளார். (கறம்பக்குடி காவல் நிலைய ரௌடி பதிவேட்டில் ஐயப்பன் பெயர் இருக்கிறது). வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஐயப்பனிடம் ஆவணங்களைக் கேட்டிருக்கின்றனர். அப்போது ஐயப்பன் சிகரெட் புகையைக் காவலர்களின் முகத்தில் ஊதியதோடு, தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். அதோடு, சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.எஸ்.ஐயின் கன்னத்தில் அறைந்ததோடு, வண்டி டேங்க் கவருக்குள் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்துக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து எஸ்.எஸ்.ஐ கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
Also Read: கால்வாயில் விழுந்து கையை உடைத்துக்கொண்ட பிரபல ரௌடி! குலைநடுங்க வைக்கும் வீச்சு தினேஷ் பின்னணி
கடந்த 2019, அக்டோபர் மாதம் நடந்த இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், ``புண்ணியமூர்த்திக்கு 332 வது சட்டப்பிரிவின்படி, 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5000 அபராதமும், 307 வது சட்டப்பிரிவின்படி 7ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ராமநாதன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, குற்றவாளி ஐயப்பன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
source https://www.vikatan.com/news/crime/pudukkottai-court-judgement-on-the-rowdy-case-who-attacked-the-ssi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக