18 முதல் 44 வயது வரை உள்ளவர்களும் கடந்த ஏப்ரல் 28 முதல் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்தவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வேளையில், CoWIN ஆப்பில் தடுப்பூசிக்குப் பதிவு செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
பதிவு செய்வது எப்படி?
புதிதாக பதிவு செய்பவர்கள் கோவின் இணையதளத்தில் (https://www.cowin.gov.in/home) உள்நுழைந்து, 'Register / Sign In'-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கவும். பின்னர் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணைக் கொடுக்கவும்.
அடுத்து வரவேற்புப் பக்கம் ஒன்று தோன்றும், அதன் கீழே இருக்கும் 'Register Members' பட்டனைக் கிளிக் செய்யுவும்.
Also Read: கோவிட் 19: எப்படி படுத்தால் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்கலாம்? நிபுணரின் விரிவான வழிகாட்டல்!
அதன்பின் வரும் பதிவு செய்யும் பக்கத்தில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை எண் (ஆதார், பான், பாஸ்போர்ட், பென்ஷன் பாஸ்புக், வோட்டர் கார்டு - இதில் ஏதேனும் ஒன்று), பெயர், பாலினம் மற்றும் பிறந்த வருடம் ஆகியவற்றைக் கொடுத்து 'Register' பட்டனைக் கிளிக் செய்யவும்.
பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்கள் பெயர் இருக்கும் வரிசையில் கடைசியாக 'Schedule' என்ற பட்டன் இருக்கும். உங்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும். உங்கள் குடும்பத்தில் வேறொருவருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்றால், அதன் கீழே இருக்கும் 'Add Member' பட்டனைக் கிளிக் செய்யவும்.
'Schedule' பட்டனைக் கிளிக் செய்த பின் தோன்றும் பக்கத்தில் எந்த மாநிலம் மற்றும் மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் நீங்கள் தேர்ந்தெடுத்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தப் பட்டியலில் உங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
Also Read: கோவிட் 19 பாதிப்பு: யாருக்கு தீவிர சிகிச்சை தேவை, தேவையில்லை? - விளக்கும் ஹோமியோபதி மருத்துவர்
கவனிக்க வேண்டிய விபரங்கள்:
-
மருத்துவமனைப் பட்டியலில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் சேர்த்துப்பட்டியலிடப்பட்டிருக்கும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிக் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளின் பெயருக்கு அருகில் 'Paid' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், அந்த மருத்துவமனைகளின் பெயருக்குக் கீழ் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பெறக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம்.
-
அனைத்து மருத்துவமனைகளிலும் 18 முதல் 44 வயதுக்குப்பட்டோருக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை. மருத்துவமனைப் பட்டியலில் இருக்கும் மருத்துவமனைகளின் பெயருக்குக் கீழே எந்த வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி வழங்குகின்றனர் என்ற விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.
-
எந்த தடுப்பூசி பெற விரும்புகிறீர்களோ (கோவிஷீல்டு அல்லது கோவேக்ஸின்) அந்த விபரமும் மருத்துவமனையின் பெயருக்குக் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பெற விரும்புபவர்கள் அதனைத் தேர்வு செய்ய முடியாது.
18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி பெற ஆன்லைன் வழியாக மட்டுமே பதிவு செய்ய முடியும், நேரடியாக தடுப்பூசி மையத்திற்குச் சென்று பதிவு செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி பெறப் பதிவு செய்வது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
18 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், கோவின் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் தடுப்பூசி போடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் சில மையங்களில் மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எனக் குறிப்பிடப்படவில்லை.
-
ஆன்லைனில் பதிவு செய்வதற்குக் கட்டணம் ஏதும் இல்லை.
source https://www.vikatan.com/technology/tech-news/how-to-register-in-cowin-website-for-coronavirus-vaccination
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக