Ad

சனி, 1 மே, 2021

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை... சொல்லி அடித்த  பினராயி விஜயன்!

கேரள சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 11.30 மணி நிலவரப்படி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 86 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காலை 8 மணிக்கு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அடுத்ததாக வழக்கமான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்த இடது கூட்டணி, காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 79 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 49 இடங்களிலும், பா.ஜ.க 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

கேரள சட்டசபைத் தேர்தல் 2021

கேரளாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள் அந்த மாநில மக்கள். ஆனால், இந்த முறை
அந்த ட்ரெண்டை உடைத்து, மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதில் முனைப்புக் காட்டினார் முதல்வர் பினராயி விஜயன்.

அதற்கேற்ப கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச் செய்வதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்
தேவையான உதவிகளைச் செய்வதிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத்
தந்தன.

இதன் எதிரொலியாக சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதே நிலை
சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதையே உறுதிப்படுத்தின.

Also Read: கேரள சட்டசபைத் தேர்தல் 2021 : வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவாரா பினராயி விஜயன்?

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு நிஜமாகும் வகையில், வாக்கு
எண்ணிக்கையில் இடது முன்னணி, முன்னிலையில் இருப்பதால், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதன் மூலம் பினராயி ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த இருப்பதாகவே தெரிகிறது.

Made with Flourish


source https://www.vikatan.com/government-and-politics/election/kerala-assembly-election-2021-cpm-ldf-alliance-leads-in-the-poll-counting-race

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக