Ad

திங்கள், 24 மே, 2021

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

Covid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா?

- வீரா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

``நீரிழிவு என்பது நம் உடலின் ரத்தக் குழாய்களையும் நரம்பு நுனிகளையும் தாக்கக்கூடிய ஒரு நோய். நரம்பு நுனிகளைத் தாக்கும் நிலையைத்தான் டயாபடிக் நியூரோபதி என்கிறார்கள். இதன் அறிகுறிகளாக நரம்பு நுனிகளில், முக்கியமாக கால்களிலும், சிலருக்கு கைகளிலும் வலியோ, மதமதப்போ, உணர்ச்சியின்மையோ, சரும வறட்சியோ வரலாம். கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை அளவுதான் டயாபடிக் நியூரோபதிக்கான முக்கிய காரணம். அதாவது நீரிழிவின் வீரியத்துக்கேற்ப முறையான மருத்துவம் செய்யாமலிருப்பது அல்லது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்காத அளவுக்கு உணவு உண்பது என இந்த இரண்டு காரணங்களால்தான் நியூரோபதி பாதிப்பு அதிகரிக்கிறது.

இந்நிலையில் டயாபடிக் நியூரோபதி உள்ளவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்றால் நிச்சயம் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். HbA1c எனப்படும் மூன்றுமாத கால சர்க்கரை அளவை 7-க்குள் கொண்டுவர வேண்டும். கூடவே டயாபடிக் நியூரோபதி பாதிப்பையும் கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொண்டு, பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்".

கறுப்பு பூஞ்சைத் தொற்று வராமலிருக்க ௭ன்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை?

- வீரா (விகடன் இணையத்திலிருந்து)

``கறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம். ஊட்டச்சத்து குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்று தாக்கவும் வாய்ப்புகள் அதிகம். அடுத்தது நீரிழிவு உள்ளவர்களுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். இவர்களுக்கு பிற தொற்றுகள் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, கதவுகளைத் திறந்துவைத்தது போல கறுப்பு பூஞ்சையும் மிக எளிதாக உடலுக்குள் நுழைந்துவிடும். எனவே நீரிழிவு உள்ளவர்கள் உணவில் பரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் குறையாமலும், ரத்தச் சர்க்கரை அதிகரிக்காமலும் கவனமாக இருக்க வேண்டும்.

Indian doctor performs extended functional endoscopic sinus surgery on a person suffering from mucormycosis

Also Read: Covid Questions: ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

அடுத்து கொரோனா தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஆக்சிஜன் செலுத்தும் நிலையில் அந்தக் குழாய்கள், நீர் நிரப்பும் குவளைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கின் வழியே இந்தத் தொற்று பரவுவதால் இந்த விஷயங்களை மருத்துவரிடம் கேட்டும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/news/healthy/how-can-we-prevent-black-fungus-mucormycosis-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக