கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிரம் தகிக்கத் தொடங்கியுள்ளது. தீவிரத்தைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் தளர்வில்லா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறிகளற்றவர்களாகவும் லேசான பாதிப்புள்ளவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு ஹோம் க்வாரன்டீன் பரிந்துரைக்கப்படுகிறது.
ஹோம் க்வாரன்டீனில் இருக்கும்போது நோயாளிகள் என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும், வீட்டில் பிறருக்குத் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி, எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள், எத்தனை நாள்கள் க்வாரன்டீனில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நமக்கு இருக்கும்.
அதே போன்று கோவிட் பரவலைத் தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் அரசு வலியுறுத்துகிறது. அடுத்தகட்டமாக குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஹோம் க்வாரன்டீன் மற்றும் தடுப்பூசி பற்றி உங்களுடைய தனிப்பட்ட கேள்விகளுக்கு மருத்துவர் நேரடியாக பதிலளிக்கும் நிகழ்வை அவள் விகடன் ஏற்பாடு செய்துள்ளது. `கோவிட்-19: ஹோம் க்வாரன்டீன் & தடுப்பூசி - உங்கள் கேள்விகளுக்கு மருத்துவரின் பதில்கள்' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை (மே 25 - செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
சென்னை வடபழனி SIMS மருத்துவமனையின் தொற்றுநோய் மற்றும் சமூக மருத்துவத்துறைத் தலைவர் மருத்துவர் குகானந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்று சந்தேகங்களுக்கு விடையளிக்கவுள்ளார். பொதுசுகாதாரம் மற்றும் கொள்ளைநோய்களைக் கையாண்டதில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் மருத்துவர் குகானந்தம்.
கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/health/healthy/aval-vikatan-webinar-to-clear-your-doubts-regarding-covid-19-and-vaccines
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக