Ad

ஞாயிறு, 16 மே, 2021

மகாராஷ்டிரா: 'ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் உயிரிழந்தார்.'

காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வந்தவர் ராஜீவ் சாதவ். மகாராஷ்டிராவை சேர்ந்த இவருக்கு கடந்த 19-ம் தேதி கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டது. உடனே அதற்காக சோதனை செய்து பார்த்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் புனேயில் உள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு வாரத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனே அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

ராஜீவ் சாதவ்

கொரோனா தொற்று மட்டுமல்லாது வேறு சில உடல் கோளாறு கோளாறு ஏற்பட்டது. மகாராஷ்டிரா வருவாய் துறை அமைச்சர் பாலாசாஹேப் தோரட் நேரில் சென்று நலம் விசாரித்தார். மற்றொரு மாநில அமைச்சர் விஷ்வஜீத் கதம் தொடர்ந்து எம்.பி.யின் உடல்நிலையை கண்காணித்து வந்தார்.அதோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து ராஜீவ் உடல் நலத்தை கேட்டறிந்து வந்தார். கடந்த வாரம் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் நிமோனியா அவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் 23 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனலிக்காமல் ராஜீவ் சாதவ் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ராஜீவ் சாதவ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குறியவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/india/congress-rajya-sabha-member-rajiv-satav-dies-after-23-days-treatment-in-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக