தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய முதல்வர் முதல்வர் ஸ்டாலின், ''கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொரோனா பாதிப்பில் இருந்து அனைத்து பணியாளர்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம். எனவே கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும்” எனக் கேட்டுகொண்டார்.
தொடர்ந்து பேசியவர், ``கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது. எதையும் மறைக்க கூடாது என அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் நான் கூறியுள்ளேன். அரசின் செய்தியில் சந்தேகம் இருப்பின் விளக்கம் கேட்கலாம். அரசுக்கு ஆலோசனையை ஊடகங்கள் தெரிவிக்கலாம். செய்திகளில் கொரோனா விழிப்புணர்வு காட்சிப் பதிவுகளை வெளியிட வேண்டும். முகக் கவசம் அணியுமாறு தொலைக்காட்சியில் வலியுறுத்த வேண்டும்'' எனவும் கேட்டுகொண்டார்.
#Covid19 தொற்றின் தீவிரம் - அதனைத் தடுக்க அரசு முனைப்புடன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கேட்டுக் கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 16, 2021
மக்களின் நல்வாழ்வே நாட்டின் எதிர்காலம்! அனைவரும் ஒன்றுபட்டு பெருந்தொற்றை முறியடிப்போம்! pic.twitter.com/98xXhtvI6c
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ``கொரோனா தொற்றின் தீவிரம் - அதனைத் தடுக்க அரசு முனைப்புடன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கேட்டுக் கொண்டேன். மக்களின் நல்வாழ்வே நாட்டின் எதிர்காலம்! அனைவரும் ஒன்றுபட்டு பெருந்தொற்றை முறியடிப்போம்!” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/stalin-discussed-with-editors-regarding-corona-pandemic-and-related-news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக