சென்னை மெரினா கடற்கரையிலுள்ள தலைவர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் 12-ம் தேதி ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் என்பவர் பெண் காவலரை போனில் அழைத்திருக்கிறார். அப்போது பெண் காவலரைத் தனியாக வரும்படி ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.
Also Read: சென்னை: இசைப் பயிற்சிக்கு வந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - புல்லாங்குழல் ஆசிரியருக்குச் சிறை
இது குறித்து பெண் காவலர் பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் காவலரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தவறாக நடக்க முயன்றது உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையின் மாண்புக்குக் களங்களம் ஏற்படுத்தும்விதமாக நடந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள விசாகா குழுவுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/chennai-women-police-complaint-against-sub-inspector-of-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக