Ad

புதன், 26 மே, 2021

பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்!

உடலுக்கு உயிர் ஆதாரம் என்றால், உயிருக்குப் பிராணனே ஆதாரம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை உடல் காரணிகளில் வாதமே ஆன்மாவையும் இயக்கக் கூடியது. நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பங்கு கொண்ட ஆக்சிஜன் நாசியில் தொடங்கி உள்ளே சென்று நலம் பயக்கிறது. பிறகு வெளியேறும் ஆக்சிஜன் நாபியில் எழுந்து நுரையீரல் கடந்து விஷ்ணு பாதம் எனும் வெட்டவெளியில் கலக்கிறது. உடலின் இயக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான இந்த சுவாசம் இடையூறு இன்றி நலமோடு நடைபெற வேண்டும். சுவாசத்தில் சிக்கல் என்றால் இயக்கத்தின் ஆதாரமே சிதைந்து விடும்.

யோகா

கொடுமையான இந்த நோய்த் தொற்று காலத்தில் பிராண வாயுவை அதிகரித்துக் கொள்ளவும், சீரான சுவாசச் செயலைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும். அதற்கு பிராண வாயுவை அதிகரிக்கும் யோக நிலைகள், மூச்சுப் பயிற்சிகள், வர்மப் புள்ளிகளை இயக்கும் முறைகள் பல உண்டு. அதோடு நுரையீரலை சுத்தப்படுத்தும் முறைகள், நோய்த் தொற்றை தடுக்கும் மூலிகைகளின் பயன்கள், வாய்க் கொப்பளிக்கும் விதங்கள், பாதுகாப்பான உணவு, பான வகைகள் என பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகளை இந்த பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ளவிருக்கிறோம்.

பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும். மேலும் நுரையீரலே சுவாசத்தை உண்டாக்குகிறது என்றால், சுவாசமே நுரையீரலை பாதுகாக்கவும் செய்கிறது. சுவாசமே உடலெங்கும் பிராண சக்தியைப் பரவச் செய்து நோயற்ற நிலையை உருவாக்குகிறது.

எனவே சுவாசம் சரியானால் வாழ்வில் அனைத்துமே சரியாகும் என்பது சித்தர்களின் வாக்கு. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியைக் கட்டுப்படுத்தலாம். முறையான சுவாச தவத்தால் மனிதன் ஈசத்துவம் என்னும் நிலையையே எட்ட முடியும் என்றால், ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற முடியாதா என்ன! உடலையும் உயிரையும் சீராக இயங்க வைக்கும் பிராண சக்தியின் அடிப்படை கூறாக இருப்பவை தச வாயுக்கள். இந்த தச வாயுக்களும் நம் உடலில் சரிவர இயங்கினால்தான் நம் உடல் ஆரோக்கியமாகச் செயல்படும்.

வர்மப் புள்ளிகள்

தொற்றால் உருவாகும் நோய்களை தடுக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும் எளிய முறையிலான இந்த யோகப் பயிற்சிகள், வர்ம முறைகள் போன்றவை உங்களுக்கு உதவும். இந்தப் பயிற்சியினை நமக்கு வழங்க இருக்கிறார் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் மு. அரி. இவர், வர்மக்கலை மற்றும் தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில் இளங்கலை பட்டம் பயின்றவர். களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் முதலானவற்றைப் பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். அனுபவம் மிக்க இந்த ஆசான் வழங்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!

இந்தப் பயிற்சியின் பலன்கள்:

முறையான சுவாசப் பயிற்சியால் நுரையீரல் தூய்மையாகி, உள்ளே செல்லும் பிராண வாயுவின் அளவு அதிகரிக்கும்.

பிராண வாயு அதிகரிப்பதால் உடல் ஆற்றல் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி தாமாகவே உருவாகும்.

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை உருவாக்கும் வர்ம, யோகப் பயிற்சிகளால் உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் உருவாகி உங்களை வெற்றியாளர் என்ற நிலைக்கு உயர்த்தும்.

யோகா வர்மப் பயிற்சிகள்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு:

இங்கு அளிக்கப்படும் ஆலோசனைகள், மூலிகைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

பயிற்சியின்போது உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 6.6.2021

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/online-coaching-for-breathing-exercise-and-varma-treatment-to-improve-immunity

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக