சிறைக்குள் வேலை செய்ததில் கிடைத்த ஊதியத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை சிறைவாசி ரவிச்சந்திரன்.
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார்.
கொரோனா பேரிடரின் இரண்டாம் அலை தீவிராமாக பரவி வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன், தான் சிறைக்குள் வேலை செய்ததன் மூலம் கிடைத்த ஊதியம் ரூ 5000-ஐ முதலமச்சரின் நிவாரண நிதிக்கு வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.
நீண்டகாலம் சிறையில் இருந்து வரும் நிலையிலும் மக்கள் நலனுக்காக தன் பங்களிப்பை செலுத்தி வருகிறார் ரவிச்சந்திரன்.
ஏற்கனவே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஏற்ட்டபோது ரூ 5000- வழங்கினார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காகவும் ரூ 20,000 நன்கொடை வழங்கினார் என்பதையும் அவர் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/rajiv-gandhi-assassination-prisoner-donated-to-chief-minister-corona-relief-fund
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக