Ad

சனி, 8 மே, 2021

'நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடலால்தான் இந்தியா உயிர் பிழைத்திருக்கிறது':பாஜக மீது சிவசேனா சாடல்!

நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கமுடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் புதிய பாராளுமன்ற கட்டிடம் தனது ஆட்சிக்காலம் முடிவதற்குள் கட்டி முடிக்கப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தீவிரம் காட்டி வருகிறார். அதுவும் அடுத்த ஆண்டே பிரதமருக்கான புதிய வீடு கட்டி முடிக்கப்படவேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் மக்கள் கொரோனா மருந்து, ஆக்ஸிஜன் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் எல்லாம் உதவிப்பொருட்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இது குறித்து சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அக்கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், 'நேரு-காந்தி உருவாக்கிய தெளிவான அமைப்பு முறைகளால்தான் இந்தியா பிழைத்து நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Prime Minister Narendra Modi

இப்போது இந்தியாவிற்கு சிறிய நாடுகள் எல்லாம் உதவிசெய்ய முன்வருகின்றன. முன்பு பாகிஸ்தான், ருவாண்டா, இலங்கை, காங்கோ போன்ற நாடுகள் மற்றவர்களிடமிருந்து உதவிளைப் பெற்றன. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் இந்தியா சிறிய நாடுகளிடமிருந்து உதவி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் மோடி அரசு புதிய பாராளுமன்றம் கட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை. நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் போன்ற முந்தைய பிரதமர்கள் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய அமைப்பு முறைகளால்தான் தற்போதுள்ள கடினமான சூழ்நிலையிலும் இந்தியா நிலைத்து நிற்கிறது.ந்தியாவில் பரவும் கொரோனா தொற்றால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக யுனிசெப் (unicef ) அச்சம் தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராட உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்யவேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது. பங்களாதேஷ், பூடான், நேபாள், மியான்மர், இலங்கை போன்ற நாடுகள் மருத்துவ உதவிப்பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

இதற்காக யாரும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை இந்தியா வாங்கிக்கொண்டிருக்கிறது. ஏழை நாடுகள் தாங்களாக முன்வந்து இந்தியாவிற்கு உதவுகின்றன.ஆனால் மோடி ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமருக்கான புதிய இல்லம் கட்டும் திட்டத்தை மட்டும் நிறுத்தமாட்டார். உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா மூன்றாவது அலை இதைவிட மோசமாக இருக்கும் என்று கணித்துள்ளனர். ஆனால் ஆளும் பாஜக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை ஓரங்கட்ட முழு நேரத்தையும் செலவிடுகிறது.மத்திய அரசு, அரசியல் பகையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து கட்சிகள் அடங்கிய கமிட்டி அமைத்து கொரோனாவை ஒழிப்பது குறித்து ஆலோசிக்கவேண்டும். 'மத்திய சுகாதாரத்துறையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கொடுக்கவேண்டும்' என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுவே தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துவிட்டார் என்பதற்கு ஆதாரமாகும். கடந்த 10 நாட்களில் இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா இறப்புகள் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு இந்தியாவில் 150 பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். இப்போது இந்தியாவைக் கண்டு உலகமே பயப்படுகிறது. உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவிற்கவர தடை விதித்துவிட்டனர். நேரு, லால்பஹதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் போன்றவர்கள் மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டங்களால்தான் இந்தியா இப்போது பிழைத்து நிற்கிறது. தற்போதைய பிரச்னையிலிருந்து நாடு வெளிவர வேண்டுமானால் பிரதமர் மோடி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/india-surviving-on-system-created-by-nehru-indira-gandhi-shiv-sena-editorial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக