Ad

சனி, 8 மே, 2021

உங்கள் ராசிக்கான அட்சய திருதியை அதிர்ஷ்டக்குறிப்பு... ஜோதிட சங்கமத்தில் நீங்களும் கலந்துகொள்ளலாம்!

அட்சய திருதியை... ‘அட்சய’ எனும் சொல்லுக்கு வடமொழியில் எப்போதும் குறையாதது என்று பொருள். குறைவில்லாத நாளே அட்சய திருதியை. அட்சய திருதியை நாளில் தொடங்கப்படும் எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். எனவேதான் புதிய வணிகத்தினைத் தொடங்குவது, பூமி பூசையிடுவது, நகைகள், தானியங்கள் வாங்குவது போன்ற சுபகாரியங்களை அட்சய திருதியை நாளில் செய்யப் பலரும் விரும்புகின்றனர்.

அட்சய திரிதியை!

பொதுவாக அட்சயத் திருதியை நாளில் நகைகள் வாங்குவது தானியங்கள் வாங்குவது என்னும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான பலன்களை அருளும் தனித்துவமான அதிர்ஷ்டக் குறிப்புகள் உள்ளன. அந்த நாளில் அவரவர் ராசிக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் குறிப்புகளை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்தால் மிகுந்த நன்மைகளைப் பெறலாம் என்பது ஜோதிட நம்பிக்கை.

கட்டணமில்லாத இந்த சிறப்பு ஜோதிட சங்கமத்தில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது குறித்து நமக்கு விரிவாக வழங்க இருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் இரா. கார்த்திகேயன். இவர் ஜோதிடத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தோடு திகழ்கிறார். இவரது பல கணிப்புகள் உண்மையாகி பரவலான கவனம் பெற்றவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரின் பங்களிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன், நம்மோடு சிறப்பு ஜோதிட சங்கமம் நிகழ்ச்சியில் இணைகிறார்.

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

இந்த நிகழ்ச்சியில் அட்சய திருதியையின் சிறப்புகள், அந்த நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் மற்றும் 12 ராசிகளுக்கான சிறப்பு அதிர்ஷ்டக் குறிப்புகள் ஆகியவற்றை வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை சக்திவிகடனும் ஜி.ஆர்.டி யும் இணைந்து வழங்குகிறார்கள்.

நாள்: 10.5.21 | நேரம்: மாலை 4.30 முதல் 5.30 வரை

கட்டணமில்லாத இந்த சிறப்பு ஜோதிட சங்கமத்தில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/astrology/atchaya-thrithiyai-special-event-with-astrologer-organized-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக