Ad

திங்கள், 17 மே, 2021

''ஞானத்தகப்பனை இழந்து விட்டேன்''- எழுத்தாளார் கி.ரா மறைவுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி!

கி.ரா அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். ''நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தகப்பனான, 99 வயது வாழ்ந்த கிரா அவர்களை இழந்து விட்டேன். கிரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கும், அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு.

கி.ராஜநாராயணன்

அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய 'கோபல்ல கிராமம்', 'கோபல்ல கிராமத்து மக்கள்', 'கரிசல்காட்டு கடுதாசி', 'வட்டார வழக்கு சொல்லகராதி' போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன்'' என்று சிவக்குமார் தனது குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-sivakumars-condolence-message-on-writer-ki-rajanarayanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக