Ad

திங்கள், 17 மே, 2021

கொரோனா: `இந்தியாவில் ஒரே நாளில் 2,63,533 பேர் பாதிப்பு; 4,329 மரணங்கள்!’ - சுகாதாரத்துறை #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,63,533 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,52,28,996 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா ஸ்வாப் டெஸ்ட்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,329. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,78,719-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,15,96,512 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 33,53,765 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 4,22,436 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 18,44,53,149 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

`அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்’

கி.ராஜநாராயணன்

எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ``'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

இணையதளம் மூலம் ரெம்டெசிவிர்!

ரெம்டெசிவிர் மருந்து

தமிழகத்தில் இணையதளம் மூலம் ரெம்டெசிவிர் பெற பதிவு செய்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை ரெம்டெசிவிர் மருந்து பெற பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் http://tnmsc.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் பதிவு செய்த மருத்துவமனைகள் பிரதிநிதிகளை அனுப்பி மருந்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு அவசியம்!'

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் சென்னையில், மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும். காலை 10 மணிக்கு மேல் இ-பதிவு இல்லாமல் பயனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு காவல்நிலைய எல்லைக்கு சென்றாலே இ-பதிவு செய்திருக்க வேண்டும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/18-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக