கரையைக் கடக்கத் தொடங்கியது யாஸ் புயல்
வங்கக் கடலில் அதி தீவிரப் புயலாக உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசாவில் கரையக் கடக்கத் தொடங்கியது. ஒடிசாவின் தென் கிழக்கு பகுதியில் 50 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயலானது, காலை 9 மணியளவில் கரையை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேற்கு வங்கத்திலும் பலத்த காற்றும், கன மழையும் பெய்து வருகிறது. அங்கி மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது.
3 வேளாண் சட்டங்கள்: வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றும் - முதல்வர் ஸ்டாலின்
``3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்! வேளாண் சட்டங்கள் குறித்து அளித்த வாக்குறுதிகளை தி.மு.க நிச்சயம் நிறைவேற்றும்!" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 மதங்களை எட்டிய விவசாயிகள் போராட்டம்
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நவம்பர் 26-ம் தேதி விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை தொடங்கினர். அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதும், சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே ஒரே முடிவு என விவசாயிகள் தீர்மானமாக இருக்கின்றனர். இன்றோடு இந்த போராட்டம் தொடங்கி 6 மாதங்களாகின்றன. அதனைக் குறிக்கும் வகையில் போராடும் விவசாயிகள் இன்று கருப்பு நாளாக கடைப்பிடிக்கின்றனர். #Black_Day_of_Farmers என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக இன்று டெல்லியில், விவசாயிகள் பேரணி நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கொரோனா விதிகளைக் கருத்தில் கொண்டு பேரணி ஏதும் நடத்தப்படவில்லை என்று பாரத் கிசான் யூனியன் அமைப்பு அறிவித்தது.
அதன்படி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் இன்று தங்கள் வீடுகளில் இருந்தபடியே கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/general-news/latest-news-updates-26-05-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக