Ad

செவ்வாய், 4 மே, 2021

''மாநிலம் விட்டு மாநிலம் பயணித்தாலும் கொரோனா டெஸ்ட் அவசிம் இல்லை!''- அரசின் 6 புதிய விதிமுறைகள்!

கொரோனா பரவல் உச்சத்தைத்தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் RT-PCR உள்ளிட்ட கொரோனா பரிசோதனைகள் செய்ய மத்திய அரசு புதிய வழிகாட்டு நிபந்தனைகளை அறிவித்திருக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருப்பதால் பல மாநிலங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் ரிப்போர்ட் அவசியம் என அறிவித்துள்ளன. இதனால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை பல மடங்கு கூடியிருக்கிறது. பரிசோதனை மையங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. இதனைக்குறைக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

''நாடு முழுக்க கொரோனா பரவலும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதாவது 100 பேரில் 20 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

தற்போதைய சூழலில் தீவிர பாதிப்பில்லாதவர்கள் வீட்டிலேயே தங்கி, தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு நோயை வெல்லலாம்'' என்று சொல்லியிருக்கும் ICMR அறிக்கை 6 முக்கிய விஷயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தியிருக்கிறது.

RT - PCR test

1. RT-PCR டெஸ்ட் மூலம் கொரோனா பாசிட்டிவ் என உறுதிசெய்யப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது மீண்டும் RT-PCR அல்லது RAT டெஸ்ட் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

2. பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட எந்த தனிப்பட்ட மனிதருக்கும் இரண்டாவது முறை கொரோனா டெஸ்ட் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

3. மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்யும் நோய் அறிகுறிகள் அற்ற பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட்டிங் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இதன்மூலம் பரிசோதனை மையங்களில் பணிபுரிவோருக்கான தேவையற்ற பணிச்சுமை குறையும்.

4. நோய் தொற்று அல்லது நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் பயணிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.

5. அறிகுறிகள் எதுவும் இல்லாத ஆனால் கொரோனா பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டவர்கள் அரசின் குவாரன்டைன் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

6.மொபைல் டெஸ்ட்டிங் பரிசோதனை மையங்கள் GeM தளம் மூலம் செயல்படுகின்றன. மாநிலங்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

- இவ்வாறு ICMR தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/healthy/corona-testing-not-necessary-for-inter-state-travellers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக