Ad

செவ்வாய், 25 மே, 2021

முதல்வர் நிவாரண நிதி: ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி!

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிர்வாக இயக்குநர்கள் டாக்டர். ஆர்த்தி கோவிந்தராஜன், டாக்டர். அருண் கோவிந்தராஜன், டாக்டர். பிரசன்னா ஆகியோர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா பேரிடரைச் சமாளிக்க ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

"இந்தக் கொரானா பெரும்தொற்று காலத்தில் அனைத்து கொரோனா ரத்தப் பரிசோதனை மற்றும் CT ஸ்கேன் கட்டணங்களை தங்களது அனைத்து கிளைகளிலும் மிகக்குறைவாக நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது" என டாக்டர் அருண் கோவிந்தராஜன் தெரிவித்தார்.

"அதன் தொடர்ச்சியாக, கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள கிளைகளிலும் ஆட்கொல்லி நோயான கொரோனா ரத்தப் பரிசோதனைகள் மற்றும் CT ஸ்கேன் சேவையினை மிகவும் நியாயமான மற்றும் குறைவான கட்டணங்களில் அங்கே வசிக்கும் பொதுமக்களுக்கு ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் அளித்து வருகின்றது.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/aarthi-scans-and-labs-donates-25-lakhs-for-cm-relief-fund

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக