மகாரஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி, கோண்டியா போன்ற எல்லையோர மாவட்டங்களில் நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம். இந்த மாவட்ட எல்லைகள் தெலங்கானா மற்றும் சத்தீஷ்கரை ஒட்டி இருக்கின்றன. இதனால் நக்சலைட்கள் வனப்பகுதி வழியாக மூன்று மாநிலத்திற்கும் சரளமாக வந்து சென்றுகொண்டிருந்தனர். அடிக்கடி போலீசார் மீதும் தாக்குதல் நடத்துவதுண்டு.
கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பாய்டி-கொட்மி வனப்பகுதியில், எடப்பள்ளி என்ற இடத்தில், வனப்பகுதியில் கிடைக்கும் இலைகளை பறிக்கும் ஒப்பந்தம் கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்க கிராம மக்களை ஒன்றிணைத்து கூட்டம் ஒன்றுக்கு நக்சலைட்கள் ஏற்பாடு செய்து வருவதாக கமாண்டோ படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக நக்சலைட்கள் கிராமத்துக்கு அருகில் குடில் அமைத்து தங்கியிருந்தனர். அங்கிருந்து கிராமத்தினரை சந்தித்து பேசி வந்தனர். இந்த நிலையில் அதிகாலையில் நக்சலைட்கள் முகாம் மீது கமாண்டோ படையினர் சுற்றி வலைத்து தாக்க ஆரம்பித்தனர். இதில் நக்சலைட்களும் திரும்ப தாக்கினர். சிலர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.
Also Read: மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
தாக்குதலுக்கு பிறகு கமாண்டோ படையினர் குடிலுக்குள் சென்று பார்த்த போது உள்ளே ஆயுதங்கள், நக்சலைட்கள் ஆதரவு புத்தகங்கள் கிடந்தன. அதோடு 13 நக்சலைட்கள் பலியான நிலையில் இருந்தனர். அப்பகுதியில் கமாண்டோ படையினர் கூடுதல் படையினருடன் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கட்சிரோலி டி.ஐ.ஜி சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்ததாக கட்சிரோலி போலீஸ் கண்காணிப்பாளர் அங்கிட் கோயல் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 நக்லைட்கள் குறித்து தகவல் கொடுத்தால் 43 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/general-news/13-naxalites-shot-dead-in-maharashtra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக