Ad

வெள்ளி, 14 மே, 2021

`அமேஸானில் ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்.. கிடைத்ததோ `ரெட்மி நோட் 10’ - மும்பைவாசி பகிர்ந்த சுவாரஸ்யம்

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு சில நேரம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதேசமயம் மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் வந்த சம்பவங்களும் நடப்பதுண்டு. மும்பையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் அமேஸானில் 4 கோல்கேட் மவுத்வாஷ் பாட்டில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவரது அதிர்ஷ்டம் அவருக்கு அமேஸானில் இருந்து வந்த பார்சலை பிரித்து பார்த்த போது உள்ளே ரெட்மி நோட் 10 மொபைல் போன் இருந்தது.

Amazon

மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாது. அத்தியாவசிய பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஆன்லைனில் வாங்க முடியும். ஆனால் அமேஸான் நிறுவனம் விதிகளை மீறி, அதுவும் கோல்கேட் மவுத்வாஷ் கேட்ட வாடிக்கையாளருக்கு மொபைல் போனை அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கோலேஷ் இது தொடர்பான சமூக வலைத்தளத்தில் செய்தியை பதிவிட்டுள்ளார். அவர் மொத்தம் ரூ.396 மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஆர்டர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு கிடைத்த மொபைல் போன் மதிப்பு ரூ.13 ஆயிரமாகும். தனக்கு கிடைத்த மொபைல் போனையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த மொபைல் போனை திரும்ப அனுப்ப மொபைல் ஆப்பில் கோரிக்கை மனுவையும் தன்னால் அனுப்ப முடியவில்லை என்று கோலேஷ் தெரிவித்துள்ளார். இன்வாய்ஸில் வேறு ஒருவரின் முகவரி இருந்தது. அதாவது தெலங்கானாவுக்கு செல்ல வேண்டிய மொபைல் போன் வழிதவறி மும்பைக்கு வந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பார்ட்னர்கள் கவனக்குறைவாக இது போன்று வேறு பொருட்களை அனுப்பி வைத்துவிடும் சம்பவங்கள் நடந்துவிடுவதுண்டு. தற்போது அந்த போனை பயன்படுத்துவதா அல்லது திரும்ப கொடுக்க வைத்திருப்பதா என்று தெரியாமல் இருக்கிறாராம்.



source https://www.vikatan.com/news/india/colgate-mouthwash-ordered-on-amazon-but-delivered-redmi-note-10-mobile-phone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக