Ad

வெள்ளி, 7 மே, 2021

கொரோனா: `தமிழகத்தில் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு! - தமிழக அரசு | முழு விவரங்கள்

``தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் அமல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில்,

தற்போது மே 1-ம் முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அனுமதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 6-5-2021 காலை 4 மணி முதல் 24-5-2021 காலை 4 மணிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களினால் வரும் 10-ம்தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும்.

முழு ஊரடங்கு

இந்த முழு வருடங்களின் போது பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது:

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும்.

3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க 26 -4 - 2019 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்கு காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். மின் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

முழு உடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது!

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும் தேநீர் கடைகள் 12:00 மணி வரை மட்டுமே செயல்படும்.

உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளி சமுதாய அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு கல்வி கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது

ஏற்கனவே அறிவித்தபடி இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் இறுதி ஊர்வலத்தில் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

டாஸ்மாக்

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. எனினும் தினமும் நடைபெறும் பூஜை பிரார்த்தனை சடங்குகள் வழிபாட்டுத்தலம் ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடை இல்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை.

அத்தியாவசிய பணிகளானபால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து விவசாயிகள் விளை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு உரடங்கின் போது அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி உரம் விதை விற்பனை செய்யும் கடைகள் மூலம் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப் படும்.

அம்மா உணவகங்கள்

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் .

காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் 12:00 மணி வரை செயல்படும்.

நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும்.

தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர் மாற்றுத்திறனாளிகள் நோயுற்றவர்கள் சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

நடைபெற்றுவரும் கட்டட பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்

ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

முழுவிவரங்கள் கீழே உள்ள லிங்கில்...



source https://www.vikatan.com/government-and-politics/news/full-lock-down-from-may-10-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக