Ad

சனி, 6 பிப்ரவரி, 2021

உங்கள் வருமான வரியை கணக்கிட விகடனின் புதிய வசதி... எளிய வருமான வரி கால்குலேட்டர்!

ஜனவரி மாதம் தாண்டிவிட்டாலே பலருக்கும் வருமான வரி தொடர்பான விஷயங்கள் மூளைக்குள் ஓடத்தொடங்கிவிடும். இந்த ஆண்டு எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது, இனிமேல் என்ன புதிய முதலீடு செய்யலாம், பட்ஜெட்டில் ஏதேனும் அறிவிப்பு இருக்குமா எனப் பல்வேறு விஷயங்களை யோசிப்போம். இவற்றைக் கடந்தால் அடுத்து வருமான வரித்தாக்கல் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்கள் வரும் மாதங்களில் மின்னல் அடிக்கும். இந்தப் பிரச்னைக்கு உதவுவதற்காகவே வந்திருக்கிறது விகடனின் புதிய வருமான வரி கால்குலேட்டர்.

Vikatan Income Tax Calculator

உங்கள் வருமான வரியைக் கணக்கிட இங்கே க்ளிக் செய்க

இதில் பழைய வருமான வரி முறை, புதிய வருமான வரி முறை என இரண்டிற்கும் வருமான வரியைக் கணக்கீடு செய்துகொள்ளலாம்.

ஒருவர், இந்த கால்குலேட்டரில் அவரின் மொத்த வருமானம், வரிச் சலுகைக்காக செய்திருக்கும் முதலீடுகள், வரிச் சலுகை அளிக்கும் செலவுகள் போன்ற விவரங்களை அளித்தால் அவர் பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறையில் கட்ட வேண்டிய வரி எவ்வளவு என்கிற விவரம் வரும். இதன் அடிப்படையில், அந்த வரிதாரர் எந்த முறையை தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும் என்கிற முடிவுக்கு வர முடியும். எளிமையான இந்த கால்குலேட்டர் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!

உங்கள் வருமான வரியைக் கணக்கிட இங்கே க்ளிக் செய்க



source https://www.vikatan.com/business/tax/vikatan-introduces-a-new-feature-income-tax-calculator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக