Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

கொரோனா காரணம்... வீட்டை, ஹோட்டலாக மாற்றி அத்துமீறினாரா சோனு சூட்?!

நடிகர் சிம்புவின் 'ஒஸ்தி' படத்தில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் சொந்தமாக 6 மாடி குடியிருப்பு கட்டடம் இருக்கிறது. இக்கட்டடத்தை சோனுசூட் கொரோனாவிற்கு முன்பு ஹோட்டலாக மாற்றிவிட்டார். முறையாக அனுமதி பெறாமல் லாட்ஜாக மாற்றிவிட்டதாக மாநகராட்சி இப்போது குற்றம் சாட்டியிருக்கிறது.

ஆனால், தான் எந்த விதி முறை மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் மாநகராட்சியிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சோனு சூட். "மகாராஷ்டிரா கடற்கரையோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அந்த அனுமதி மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. கொரோனா காரணமாக அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்றும் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

சக்தி சாகர் கட்டடம்

ஆனால், அக்கட்டடத்தை ஹோட்டலாக மாற்ற அனுமதி பெறப்படவில்லை என்றும், மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்த பிறகும் கட்டடத்தில் ஹோட்டலுக்குத் தேவையான மாற்றங்களை செய்து வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் போலீசில் புகார் செய்துள்ளது. மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து சோனு சூட் மும்பை நீதிமன்ற்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், நீதிமன்றம் அவருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. அதேசமயம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 3 வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறது. தற்போது 3 வாரங்கள் முடிந்துவிட்டதால் மேற்கொண்டு கட்டடத்தில் எந்த வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறது.

சோனு சூட்

"இக்கட்டடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் தங்கி இருந்தனர். இப்போது ஹோட்டலாக மாற்ற அனுமதி கிடைக்கவில்லையெனில் மீண்டும் இக்கட்டடத்தை குடியிருப்பு கட்டடமாக மாற்றிவிடுவேன்" என்கிறார் சோனு சூட்.

முழுமையான லாக்டெளன் காலத்தில் எளியமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்து சோனு சூட் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.


source https://cinema.vikatan.com/bollywood/the-villain-actor-sonu-sood-converted-the-apartment-building-into-a-hotel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக