சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ``2018-ம் ஆண்டு முதல் பெரம்பூரைச் சேர்ந்த பாலாஜியும் நானும் காதலித்து வந்தோம். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலாஜி, பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால், நான் கர்ப்பமடைந்தேன். கட்டாயப்படுத்தி பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் கர்ப்பத்தைக் கலைத்தனர்.
மேலும் பாலாஜி, என்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்து புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். எனவே பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Also Read: சென்னை: மாணவிமீது ஒருதலைக் காதல்! - உதவிப் பேராசிரியரைச் சிக்கவைத்த போலி திருமணச் சான்றிதழ்
புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலாஜியைத் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவியின் வீட்டுக்குச் சென்ற பாலாஜி, அங்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதனால், பாலாஜியைப் பிடித்த மாணவியின் குடும்பத்தினர்,காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து பாலாஜியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையில் பாலாஜி, தன்னுடைய அம்மாவை நீதிபதி என்று சட்டக்கல்லூரி மாணவியிடம் கூறியதாகத் தெரியவந்திருக்கிறது. சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகே போலீஸார் நடவடிக்கை எடுத்ததாக மாணவி தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-youth-over-harassment-complaint
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக