தமிழகம் முழுவதும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டுவதும், அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், போஸ்டர் ஒட்டுவதில் அ.தி.மு.க - அ.ம.மு.க இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு, காவல்துறையின் தலையீட்டில் மோதல் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் பண்ணை சின்னராஜா, சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினார். இதனால் சின்னராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனை அடுத்து, தேனி நகர் பகுதியில், பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார், தொடர்ந்து, ஆண்டிபட்டியில், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சிலர் என அடுத்தடுத்து சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். சின்னராஜா போலவே, போஸ்டர் ஒட்டிய அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.
Also Read: `குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க; அப்புறம் சவால் விடலாம்!’ - ஓ.பி.எஸ் மகனுக்கு தங்கம் பதில்
இன்று, தேனி எம்.பி ரவீந்திரநாத் பிறந்தநாள் என்பதால், நேற்று நள்ளிரவு, ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞர் பாசறை நிர்வாகிகள் சார்பில், ரவீந்திரநாத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டர்களை ஆண்டிபட்டி நகர் பகுதியில் ஒட்டினர். இந்நிலையில், ஆண்டிபட்டி நகரின் முக்கிய பகுதியில் ஏற்கனவே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால், சசிகலா போஸ்டர்களுக்கு மேலே ரவீந்திரநாத் போஸ்டர்களை ஒட்டினர்.
இதனை அறிந்த அ.ம.மு.க’வினர், போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த அ.தி.மு.க’வினரை தடுத்தனர். இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக குற்றம்சாட்டிய அ.ம.மு.க’வினர், இறுதியாக அங்கிருந்து புறப்பட்டனர். சசிகலா போஸ்டர்கள் மீதே ரவீந்திரநாத் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இச்சம்பவத்தால் நள்ளிரவில் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: தேனி : `ராஜமாதாவே வருக...’ - சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள்!
source https://www.vikatan.com/news/politics/ravindranath-poster-pasted-over-sasikala-poster-clash-between-admk-ammk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக