நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடத்திய பணி நிமனத்துக்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக, கரூர் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
நெய்வேலியில் இயங்கிவரும் நிலக்கரி நிறுவனம் Graduate Excutive Trainee என்ற வேலைக்கான தேர்வுகளை நடத்தியது. அதில்தான், தமிழக இளைஞர்கள் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டிருப்பதாக கரூர் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: கரூர்: மண்பானைச் சமையல்... குழந்தைகளுடன் செல்ஃபி! - ராகுல் காந்தியின் ஒரு நாள் விசிட்
இதுகுறித்து, ஜோதிமணி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அநீதி எனவும், இங்கு உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களின் நலன்களை காக்கும் வகையில் இடஒதுக்கீடு உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் ஜோதிமணி, 'நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் Graduate Excutive Trainee பணியில் உள்ள 259 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் அண்மையில் நடத்தப்பட்டன. முதற்கட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,582 பேரில், ஒரு விழுக்காட்டினர் கூட தமிழ்நாட்டிலிருந்து இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியிருந்தும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும் முயற்சியைப் போல் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவய்ப்புகளில் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்படுவது முதன்முறை அல்ல. இவ்வாறு நடப்பது தமிழக மக்களிடையே வேலைவாய்ப்பு குறித்த மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தாங்கள் இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து, தமிழக இளைஞர்களின் நலன்களைக் காக்க இட ஒதுக்கீடு உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/karur-mp-jothimani-writes-to-union-minister-over-nlc-appointments-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக