தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் தலைவர்கள் பலரும் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க தரப்பில் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு சசிகலாவின் விடுதலை தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிகளே ஒட்டிவரும் போஸ்டர்கள் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தனது 5-ஆம் கட்ட பிரசாரத்தை முதல்வர் பழனிசாமி தொடங்குகிறார். இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் சர்ச்சையாகியிருக்கிறது.
திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் அமைச்சர் பெஞ்சமினின் மதுரவாயல் தொகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர், அதைத்தொடர்ந்து அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் என மாவட்டத்தைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடிக்க இருக்கிறார். முதல்வரின் வருகையை ஒட்டி திருவள்ளூர் அ.தி.மு.க மாவட்டச்செயலாளர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஆண்கள் கூட்டத்தை விடவும் பெண் தொண்டர்கள் கூட்டம் மிகுதியாக இருக்க வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தி இருப்பதால், அ.தி.மு.க மகளிரணியின் மூலம் சேலைக்கும், ரொக்கத்திற்கும் ஆள்களை முனைப்புடன் சேர்த்து வருகின்றனர் அ.தி.மு.க-வினர் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் மாவட்ட மக்கள்.
Also Read: சசிகலா: `கண்ணாடிக்கூண்டு; அ.தி.மு.க உறுப்பினருக்குச் சொந்தமான கார்... கைதுசெய்ய அரசு தீவிரமா?
மீஞ்சூர் கடைவீதியில் நடக்கவிருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இன்று மாலை கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். அதன் காரணமாக, மீஞ்சூரில் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த நிலையில், மீஞ்சூர் அ.தி.மு.க பகுதிச் பொருளாளர் விஜயன், மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரை வரவேற்க அ.தி.மு.க-வினர் கட்அவுட் வைப்பது, பேனர் அடிப்பது என மும்மரமாக இருக்கும் நேரத்தில், பகுதி பொருளாளர் விஜயன் மட்டும் சசிகலாவுக்கு ஆதரவாக வாழ்த்து போஸ்டரை அடித்து ஏட்டிக்குப் போட்டியாக ஒட்டியுள்ளார்
``அ.தி.மு.க கழகப் பொதுச்செயலாளர், தியாகத் தலைவி சின்னம்மாவே... கழகத்தை வழிநடத்த வருக! வருக!! என வரவேற்கிறேன்" என்று போஸ்டர் அடித்துள்ள விஜயனின் செயலால் திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் கொதித்துப் போயிருக்கிறார்கள். போஸ்டர் குறித்து முதல்வரின் ஆதரவாளர்கள் கேட்டதற்கு,`` தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்த ஒரே வழி... தியாகத்தலைவி சின்னம்மாவின் சீரிய தலைமையை ஏற்று அவர் வழி செல்வது மட்டும் தான்" என்று சேம் சைட் கோல் அடித்துவிட்டு விளக்கம் வேறு கொடுக்கிறார் விஜயன் என்று புலம்புகின்றனர் மீஞ்சூர் பகுதி அதிமுகவினர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/minjur-admk-cadre-paste-posters-welcoming-sasikala-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக