Ad

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

தமிழ் மண்ணே வணக்கம்: ``பேச்சு ஒரு பேராயுதம்!’’ - பயிலரங்கத்துக்கு அழைக்கிறார் நாஞ்சில் சம்பத்

சாதிக்கத் துடிக்கிற இளைஞர்கள் வெற்றிகளை வசமாக்கிக்கொள்ளப் பேச்சுக்கலை என்பது மிக மிக அவசியமானது. அந்த வகையில், சாதிக்கத் துடிக்கிற தமிழக இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதற்கு ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்’ என்ற தலைப்பிலான இலவச பயிலங்கரத்தின் மூலமாக மிகப்பெரிய வாய்ப்பை ஜூனியர் விகடன் ஏற்படுத்திக்கொடுக்கிறது.

நாஞ்சில் சம்பத்

இதன் முதல் நிகழ்ச்சியாக நாளை (பிப்ரவரி 6-ம் தேதி) மாலை 6 - 7 மணி அளவில் நடைபெறவிருக்கும் பயிலரங்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஆற்றல்மிக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று, பயிற்சி வழங்கவிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்துக்கு அழைப்பு விடுக்கிறார் நாஞ்சில் சம்பத்...

“கூவத் துடிக்கிற குயில் குஞ்சாய்... தாவத் துடிக்கிற தளிர் மான் குட்டியாய் பேசத் துடிக்கிற தம்பி தங்கைகளுக்கு ஜூனியர் விகடன் ஒரு வாசலைத் திறந்துவைக்கிறது. ஜனநாயகம் இருக்கிற வரை, பேச்சுக்கும் மேடைக்கும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். உலக வரலாற்றில் மகத்தான பேச்சாளர்கள் சரித்திரத் திருப்பத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்... கர்த்தாவாக இருந்திருக்கிறார்கள்.

தமிழ் மண்ணே வணக்கம்

அந்த வகையில், சுமார் அரை நூற்றாண்டு காலமாக கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் எனப் பொதுவெளியியிலும் அரசியல் மேடைகளிலும் இலக்கிய மேடைகளிலும் தன்னம்பிக்கைக் கருத்தரங்குகளிலும் பள்ளி - கல்லூரிகளிலும் உரையாற்றிய நாஞ்சில் சம்பத் என்கிற நான், பேசத்துடிக்கிற என் தம்பி தங்கைகளுக்கு பேசுவதற்கு பயிற்சிதர வருகிறேன்.

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

இந்தப் பயிற்சியில் நீங்கள் அவசியம் கலந்துகொண்டு எளியவன் நான் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு நீங்களும் சொற்பொழிவாளராக வேண்டும் என்கிற கனவகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் வருகிற காலம் உங்கள் காலமாக இருக்கும்.

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

தமிழ் மண்ணே வணக்கம்

ஜனநாயகத்தை மீட்பதற்கும் பட்டமரம் துளிர்ப்பதற்கும் ஆதிக்கக் கால்களை வெட்டிச்சாய்ப்பதற்கும் பேச்சே பேராயுதம். அந்த ஆயுதத்தை ஏந்துவதற்கு அனியமாகுங்கள்... ஆயத்தமாகுங்கள். பயிற்சி தர வருகிறேன். உங்களை சந்திக்கிறேன். உங்கள் நெஞ்சங்களில் சங்கமிக்கிறேன்” என்கிறார் நாஞ்சில் சம்பத்.

திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், பெரியாரிய சிந்தனையுடன் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழகம் முழுவதும் மேடைகளில் முழங்கிவருபவர். அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்!

வாருங்கள்... உரக்கப் பேசுவோம், உண்மையே பேசுவோம்!

இதில் பங்கேற்க, கீழே உள்ள லிங்கில் பதிவு செய்துகொள்ளுங்கள்...

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/



source https://www.vikatan.com/literature/politics/online-training-on-public-speaking-by-nanjil-sambath

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக