`7-ம்தேதி தமிழகம் வருகிறார் சசிகலா’
நான்காண்டுகள் சிறை தண்டனை முடிவுற்று விடுதலையாகியிருக்கும் சசிகலா, பெங்களூரு அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சசிகலா, விரைவில் தமிழகம் வருவார் என அவரின் ஆதரவாளர் எதிர்பார்க்கின்றனர். சசிகலா வை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவது, கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், ``சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் திரும்புவார்” என்ற தகவலை வெளியிட்டார். மேலும் உண்மையின் பக்கம் இருப்பபர்கள், விஸ்வாஸத்தின் பக்கம் இருப்பவர்கள், சசிகலாவை ஆதரிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/03-02-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக