Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

`அ.தி.மு.க-வை மிரட்டுவதற்கே எல்.முருகன் அப்படிப் பேசுகிறார்!’ - ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``கொரோனாவைத் தடுப்பதிலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துவிட்டன.

ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வரும் நவம்பர் 25-ம் தேதி வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பொது வேலைநிறுத்தம் நடைபெறவிருக்கிறது” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க-வோடும், பா.ஜ.க தலைவர் முருகன் அ.தி.மு.க-வோடும், ஹெச்.ராஜா மத்திய தலைமை எடுக்கும் முடிவின்படியும், வானதி சீனிவாசன் புதிய கட்சிகளோடு கூட்டணி என்றும் ஆளாளுக்கு வெவ்வேறு கருத்தைக் கூறிவருகின்றனர்” என்று விமர்சித்தார்

ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பா.ஜ.க கை நீட்டும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், "மத்தியில் பா.ஜ.க அதிகாரத்திலிருக்கும் கர்வத்தில், ஆணவத்தோடு பா.ஜ.க தலைவர் முருகன் பேசிவருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறதா? அ.தி.மு.க-வை மிரட்டுவதற்கே பா.ஜ.க தலைவர் முருகன் இதுபோலப் பேசிவருகிறார்" என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/politics/ramakrishnan-slams-bjp-and-l-murugan-over-political-alliance-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக