எற்பிரான்ஸ் பத்திரிகையான சார்லி ஹெப்டோவில் வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூனை மாணவர்களிடம் காட்டி பாடம் நடத்தியதால், சாமுவேல் பேட்டி என்னும் ஆசிரியர் கொல்லப்பட்டார். அதனையொட்டி அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்லாம் மதம் குறித்து தெரிவித்த கருத்து உலக அளவில் சர்ச்சைக்கு விதை போட்டது. இதனால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக உலக அளவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்து மும்பையிலும் அவர் உருவப் படத்தை சாலையில் ஒட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையான சார்லி ஹெப்டோவில் (Charlie Hebdo)வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூன் ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி அந்த கார்ட்டூனை வகுப்பறையி,ல் தனது மாணவர்களுக்கு காட்டி பாடம் நடத்தியதற்காக சாமுவேல் பேட்டி என்னும் பாரிஸைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். இதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்லாமிய மதம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் உருவப்படத்தை மும்பையின் நாக்பாதா மற்றும் பெண்டி பஜார் நகரின் சாலைகளில் ஒட்டி அதனை காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பினை இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்த மும்பை மாநகர போலீஸார், சாலையில் ஒட்டப்பட்டிருந்த படங்களை உடனடியாக நீக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: `இதோடு நிற்கப்போவதில்லை; தாக்குதல்கள் தொடரலாம்!’ - எச்சரிக்கும் பிரான்ஸ் அமைச்சர்
பாரிஸ் நகரின் தேவாலயத்தில் கடந்த 29-ம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற அசாதாரணமான சூழலில் பிரான்ஸுக்கு உரிய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில், ``பாரிஸ் நகரில் நிகழ்ந்துள்ள கொடூரமான சம்பவத்துகுப் பிறகு, பிரான்ஸ் நாட்டுக்கு உரிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில், இதுபோன்ற செயல்களின் மூலம் பிரான்ஸ் அதிபரை அவமதிக்கப்படுவத்தை கண்டுகொள்ளாமல் அம்மாநில அரசாங்கம் என்ன செய்து வருகிறது?” என்று மகாராஷ்டிராவை ஆளும் உத்தவ் தாக்கரே அரசை விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ``ராசா (Raza)” என்னும் இஸ்லாமிய அமைப்பு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், தனது செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/protest/protest-against-french-president-grows-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக