ஒருவழியாக தமிழகத்தில் லாக் டவுன் தளர்வுக்கு வர ஆரம்பித்துவிட்டது. 'இனி சின்ராசைக் கையில பிடிக்க முடியாது' என நாளா பக்கமும் ஆலாய்ப் பறக்க ஆரம்பித்துவிட்டனர் பொதுமக்கள். தளர்வு என்றாலும் கூட 'தம்பி தம்பி, லாக் டவுனுக்குத்தான் தளர்வே தவிர வைரஸ்களுக்கு அல்ல!' என அலர்ட் செய்கிறார்கள் மருத்துவர்கள். ஆம், இனிதான் நாம் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்! இந்தக் கட்டுரையில், இந்நேரத்தின் அத்தியாவசியமான வீட்டின் சுத்தம் பற்றி அலசி ஆராய்வோம், வாருங்கள்.
சுகாதாரமான வீடு, ஆரோக்கியத்தின் இருப்பிடம்...
சிறிதோ பெரிதோ, பொருள்கள் அதிகமோ கம்மியோ, வீட்டின் சுகாதாரம்தான் இப்போதைக்கு முக்கியம். நீங்கள் வீட்டிலேயே இருப்பவரா? அடிக்கடி வீட்டைச் சுத்தம் செய்ய மறக்காதீர்கள், இதனால் வீடு அழகாக இருப்பதோடு, நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். ஆனாலும், பார்க்கச் சுத்தமாக இருக்கும் வீட்டிலும் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். எனவே, வீட்டைச் சரியாக சுத்தம் செய்வது எப்படி? பார்ப்போம் வாருங்கள்!
லிவ்விங் ரூம் மற்றும் பெட் ரூம்-ஐ டஸ்டிங் செய்தால் மட்டும் போதாது!
டேபிள், சேர், சோஃபா, கதவுகளின் கைப்பிடி, பொம்மைகள், இவற்றைத் தூசி தட்டி, பெருக்கி முடித்தால் மட்டும் அது சுத்தம் ஆகாது! காரணம் கொடிய வைரஸ்கள் இன்னும் அந்தப் பரப்புகளில் இருக்கும். எனவே, டஸ்டிங் முடிந்த பின்பு நிச்சயம் ஒரு நல்ல டிஸின்ஃபெக்டன்ட் கொண்டு நாம் அடிக்கடி புழங்கும் பொருள்களையும் வீட்டுப் பரப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டியது கட்டாயம்.
சோஃபா மற்றும் பெட் போன்ற நுண்துளைகள் கொண்ட பரப்புகளில் கவனம்!
தலையணை, குஷன்கள், சோஃபா, கர்டெயின்ஸ், பெட் மற்றும் திரைச்சீலைகள் போன்ற பஞ்சு/துணி வகைகளால் ஆன நுண்ணிய துளைகள் கொண்ட பொருள்களைத் தூசி தட்டியும், எப்போதாவது தேவைப்படும்போது மட்டும் துவைத்தும் அவற்றைச் சுத்தம் செய்வோம். ஆனால் இப்போதைய காலத்தில் இவற்றைத் தினசரி சுத்தம் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவற்றைச் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு துவைப்பது ஆகாத காரியம், மேலும் அப்படிச் செய்தாலும் அவை முழுமையாக காய இரண்டொரு நாள் ஆகும் என்பதே உண்மை!
இங்குதான் சேவ்லான் சர்ஃபேஸ் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே நமக்குக் கைகொடுக்கிறது. நுண்கிருமிகளை அழித்து, சிறந்த பாதுகாப்பை அளிக்கும் சேவ்லானின் இந்த ஸ்ப்ரேவை மிகச்சுலபமாக உபயோகிக்கலாம். மேற்கூறப்பட்ட பொருள்களின் மேல் சேவ்லான் ஸ்ப்ரேவை அடிப்பதன் மூலம் நொடிப்பொழுதில் டிஸின்பெக்ட் செய்ய முடியும், இதனோடு பிரெஷ்ஷான வாசனையையும் பரப்புகிறது சேவ்லான். மேலும், சேவ்லான் ஸ்ப்ரே உடனடியாக ஆவியாகக்கூடியது என்பதால், இதைப் பயன்படுத்திய பிறகு பரப்புகளைத் துடைக்க வேண்டும் என்கிற தேவையே இல்லை!
தூய்மைக்கு கேரண்டி சேவ்லான் ஸ்ப்ரே!
திரவ நிலையிலான டிஸின்ஃபெக்டன்ட்களை விடச் சிறப்பாகச் செயல்படக்கூடியது சேவ்லான் சர்ஃபேஸ் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே. 99.99% பூஞ்சைகள், வைரஸ்கள் மற்றும் கிருமிகளைக் கொல்லக்கூடியது. H1N1, ரோட்டா வைரஸ் மற்றும் நோரோவைரஸ் போன்ற நுண்ணுயிரிகளிடமிருந்தும் பாதுகாப்பை வழங்கக்கூடியது.
டேபிள், சேர், சோஃபா, குஷன், சாவிகள், ஹெல்மெட், கைப்பிடிகள் மற்றும் அணிகலன்கள் போன்றவற்றைத் தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு நிச்சயம் சுத்தம் செய்ய முடியாது. எனவே, நீங்கள் சுத்தம் செய்ய நினைக்கும் பொருள்களில் இருந்து, அரை அடி தூரத்தில் வைத்து சேவ்லான் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி சுலபமாகச் டிஸின்பெக்ட் செய்யலாம்.
இப்போது, சேவ்லான் சர்ஃபேஸ் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரேயை மளிகைக் கடைகளிலும், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக தளங்களிலும் வாங்கலாம்!
source https://www.vikatan.com/news/miscellaneous/dusting-is-not-enough-use-savlon-for-all-around-protection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக