வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல்நாளே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் 6 மணி நேரமாகப் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாலைகள் பல இடங்களில் வெள்ளக்காடானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னை திருவல்லிக்கேணியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். ராயப்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: மழை வந்தால் அரசும், மக்களும் செய்ய வேண்டியது இதுதான்! ரமணன் Exclusive Interview | SR Ramanan
சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவானது. பாலவாக்கத்தில் 14.8 செ.மீ, பாடியில் 12 செ.மீ, ஜார்ஜ் டவுன் 11 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10.4 செ.மீ, கொரட்டூர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 10.1 செ.மீ மழை பாதிவாகியிருக்கிறது. புறநகர்ப் பகுதியான செங்குன்றத்தில் 13 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம்
2017-ம் ஆண்டு நவம்பருக்குப் பின்னர் சென்னையில் குறைந்தநேரத்தில் அதிகபட்ச மழை பதிவாகியிருக்கிறது. சென்னையில் இன்னும் இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு தெரிவித்திருக்கிறது. தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-in-chennai-water-logged-in-main-roads
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக