Ad

சனி, 31 அக்டோபர், 2020

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மதன்குமார் (28). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மதன்குமார் ஆன்லைனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி

Also Read: ஆன்லைன் ரம்மி: எதிர்ப்புறம் விளையாடுவது யார் தெரியுமா? - விளக்கும் சைபர்கிரைம் அதிகாரி

ஆரம்பத்தில் பணம் நிறைய சம்பாதித்த மதன், பிறகு தோற்றிருக்கிறார். முக்கியமாக, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையே ஆகிவிட்டார். இதனால், ஆன்லைனில் விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காக கடன் வாங்கி விளையாடி இருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த, மதன்குமார் மனவிரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து, மதன்குமார் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதன்குமார் தற்கொலை சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Also Read: “ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

கடந்த 10 நாள்களில் ஆன்லைன் ரம்மியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து, மேற்கொண்டு தற்கொலைகள் நடக்காத வண்ணம் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

மதன்குமார் சடலமாக

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என ஏற்கெனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-youth-commits-suicide-after-losing-money-in-online-rummy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக