Ad

புதன், 28 அக்டோபர், 2020

`என்னைத் தூக்கியெறிய எப்படி மனசு வந்துச்சு?’ -காதலன் வீட்டுமுன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அருளரசன் (30), தோல் தொழிற்சாலை பணியாளர். இவரது மனைவி சக்தி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து-வேறுபாடு காரணமாகப் பிரிந்து கிருஷ்ணகிரியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தச் சூழலில், தன்னுடன் வேலை செய்துவந்த 32 வயதுடைய நாகம்மாள் என்பவருடன் அருளரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாகம்மாளும் ஏற்கெனவே திருமணமானவர். திருச்சியைச் சேர்ந்த நாகம்மாள் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை வி.சி.மோட்டூரில் தங்கியிருந்தார்.

Representational Image

மனைவியைப் பிரிந்த அருளரசனும், கணவனைப் பிரிந்த நாகம்மாளும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று அருளரசனின் தாயார் இறந்துவிட்டார். மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரிந்துச் சென்ற அருளரசனின் மனைவி சக்தி பெற்றோருடன் வந்துள்ளார். மனைவியைப் பார்த்த அருளரசன், மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தடையாக இருந்த காதலி நாகம்மாளை, இனிமேல் தன்னுடன் பேசவேண்டாம் என்றுக்கூறி திடீரென தூக்கியெறிந்து பேசியுள்ளார்.

Also Read: சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு

`என்ன நடக்கிறது?’ என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த காதலி நாகம்மாள், நேற்று மாலை அருளரசனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.``இவ்வளவு நாள் புருஷன், பொண்டாட்டியாகத்தானே சேர்ந்து வாழ்ந்தோம். ஏழு வருஷத்துக்கு முன்னாடி விட்டுட்டுப் போன பொண்டாட்டிக்காக என்னைத் தூக்கியெறிய எப்படி மனசு வந்துச்சு? எனக்கொரு பதில் சொல்லு?’’ என்று கேட்டுள்ளார். அருளரசன் மிக மோசமாக பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான நாகம்மாள், ஏற்கெனவே கொண்டுவந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

Representational Image

தீ உடல் முழுவதும் பற்றி எரிய வலி தாங்க முடியாமல் அலறியடித்து இங்கும் அங்குமாக ஓடினார். சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வாலாஜாபேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து அருளரசனிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்த கொடூரச் சம்பவத்தால், மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அருளரசனின் மனைவியும், அவரது பெற்றோரும் ஊருக்குச் சென்றுவிட்டனர்.



source https://www.vikatan.com/news/crime/ranipet-woman-commits-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக