Ad

புதன், 28 அக்டோபர், 2020

புறக்கணிப்பு, சம்பளப் பிரச்னை, அலைக்கழிப்பு... மன உளைச்சலில் சகாயம் ஐ.ஏ.எஸ்!

`அரசு நிர்வாகம் மோசமாக இருக்கிறது. ஊழல் அதிகாரத்தில் இனியும் தொடர விரும்பவில்லை. அரசுப் பணியிலிருந்து என்னை விடுவித்தால் போதும்' என்ற மனநிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "கொரோனா பேரிடர் காலத்தில், மாவட்டங்களில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் சகாயத்தைப் புறக்கணித்தனர். ஆனாலும், தன்னார்வத்துடன் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசுச் செயலராக அவர் பதவி உயர்வு பெற்று நான்காண்டுகள் கடந்த நிலையில், எந்த வேலையும் கொடுக்காமல் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு நேர்மையான அதிகாரிக்கு சம்பளத்தைத் தாண்டி வேறு எந்த வருமானமும் இல்லை. இப்படியான சூழலில் சீனியாரிட்டியில் இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெயஸ்ரீ முரளிதரன், எம்.எஸ்.சண்முகம் உள்ளிட்ட சில அதிகாரிகள், அவர்களுக்கும் அடுத்தபடியாக உள்ள விஜயகுமார், முனியநாதன், காமராஜ், வள்ளலார், சுகந்தி, ஷோபனா ஆகியோரைவிடவும் 15,000 ரூபாய் சம்பளம் அவருக்குக் குறைவாகத்தான் வருகிறது. ஜூனியர்களின் சம்பளம் உயரும்போது, இயல்பாகவே சீனியர்களின் சம்பளமும் உயரும்.

சகாயத்தின் பேட்ச் மேட்டாக இருப்பவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை இல்லை. இது குறித்து மூன்று முறை நினைவூட்டியும் அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதைப் பற்றி அவர் ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதற்கும் பதில் இல்லை.

பிரான்ஸ் தமிழ் கலாசார மன்றத்தின் 15-வது ஆண்டுவிழா 14.4.2020 அன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க சகாயத்துக்கு அழைப்பு வந்தது. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளிநாடு செல்ல அனுமதி கேட்டால், மத்திய அரசின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது வழக்கம்.

இதற்கான கடிதத்துடன் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பினால் போதும். ஆனால், பொதுத்துறை அதிகாரிகளோ, `அங்குள்ள செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கான கடிதம் வேண்டும்' என்றார்கள். அதையும் வாங்கிக் கொடுத்த பிறகும் `சாப்பாட்டுச் செலவுக்கு எவ்வளவு, விமானச் செலவு எவ்வளவு?' என்றெல்லாம் சம்பந்தமே இல்லாத கேள்விகளைக் கேட்டு அலைக்கழித்து, கடைசியில் அவர் பிரான்ஸ் செல்வதையே தடுத்துவிட்டனர்..."

- `கறைபடிந்த ஊழல் அமைப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும்' என்ற மனநிலையில் இருக்கிறார் சகாயம். இதன் முழுமையான பின்புலத்துடன், ``ராஜினாமா முடிவு உண்மையா?" என்ற கேள்விக்கான அவரது பதிலையும் உள்ளடக்கிய செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2G8Je0Q > "நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!" - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ் https://bit.ly/2G8Je0Q

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/general-news/the-everyday-challenges-which-are-sagayam-ias-facing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக