‛‛உனக்கு கார் வரையத் தெரியுமா? எங்கே, ஒரு கார் வரைஞ்சு காட்டு பார்ப்போம்’’ என்று திருச்சியைச் சேர்ந்த அந்தச் சிறுவனிடம் கேட்டபோது… அவன் காரை வரைந்து காட்டவில்லை. மாறாக, கையில் கிடைக்கும் கார்டுபோர்டுகள், பிளாஸ்டிக்குகளை வைத்து ஒரு காரையே செய்து காட்டினான். ஸ்கேல் மாடல் காரோடு ஒப்பிடும் அளவுக்கு அது இருந்தது. இத்தனைக்கும் அவன் செய்தது, நம் ஊர் மாருதி, ஹூண்டாய் இல்லை – ஷெவர்லே கமேரோ. ‛‛கமேரோதான் எனக்கு பிடிச்ச மஸில் கார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படமே அதுக்காகத்தான் பார்த்தேன்’’ என்றான் மழலை மாறாமல்!
இங்கிலாந்து நிறுவனமான எம்ஜி நிறுவனத்தில் நுழைவதெல்லாம் சான்ஸே இல்லை. லண்டனில் உள்ள மிகப் பெரிய RCA காலேஜில் டிசைன் படித்துக் கொண்டே, எம்ஜி நிறுவனத்தில் ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு வந்திருக்கிறார், கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் ராமலிங்கம் எனும் மாணவர். எம்ஜி-க்கு இன்டர்ன்ஷிப் செய்யும் 700 பேரில் 4 பேர்தான் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதில் ஷரோன் மட்டும்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இத்தாலியில் உள்ள மிகப் பெரிய டிசைன் காலேஜில் டிசைன் சம்பந்தமான படிப்பு படித்துவிட்டு, பெரிய நிறுவனத்தில் வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் சில தமிழ் மாணவர்கள்.
ஓகே… இவையெல்லாமே மோட்டார் விகடன் நடத்தும் கார் டிசைன் வொர்க்ஷாப்பில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட ரிசல்ட் என்றால் நம்புவீர்களா? அறிமுக பயிலரங்கங்களில் கார் டிசைன் பற்றி ஒரு ஒட்டுமொத்த பருந்து பார்வையை பலர் பெற்றிருக்கிறீர்கள்.
இந்த பயிலரங்கில் நாம் அதிகமாக கவனம் செலுத்தப் போவது காரை உருவாக்கப் போகும் மூலப்பொருட்கள் பற்றி.
கார் கம்பெனியின், மாடலின் வரலாறு, நிகழ்காலம், அதற்கான எதிர்காலம்... என மூன்றையும் உள்வாங்கிக் கொண்டால்தான் அறிவியல், கற்பனைத்திறன் மற்றும் தளராத முயற்சி ஆகியவை கொண்டு ஒரு காரை வடிவமைக்கும் மாபெரும் குழுவில் இணைய முடியும். இது பகீரத முயற்சியல்ல. திருப்தி, புகழ், பணம் என்று எல்லா வகைகளிலும் பயனளிக்கக்கூடிய முயற்சி.
கார் டிசைனுக்கென்று B.Des, (Bachelor of Design), JEE, UCEED (UnderGraduate Common Entrance Examination for Design) என்று ஒரு சில படிப்புகள் இருக்கின்றன.
இந்த வொர்க்ஷாப்பை நடத்துபவர், வடிவமைப்பு நிபுணர் சத்தியசீலன். நாம் சாலையில் பார்க்கும் அசோக் லேலாண்ட் லாரி, பஸ்கள், தோஸ்த், டிவிஎஸ் கிங் ஆட்டோ, டாடா இண்டிகா கார், நானோ என்று எக்கச்சக்க வாகனங்கள் இவரது குழுவின் கை வண்ணத்தில், வடிவமைப்பில் வந்தவையே! இவர் இப்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.
முதல் மூன்று பாராக்களில் நாம் குறிப்பிட்டது இவரது மாணவர்களைத்தான். ‛‛பொதுவாக, கார் டிசைன் என்றால் இத்தாலி, ஜெர்மனிதான். ஆனால், இந்தியர்களைக் குறிப்பிடுவதில்லை. அதற்காக இந்தியாவில் டிசைனர்கள் இல்லை என்றில்லை; அவர்களை உருவாக்குவதுதான் இந்த நோக்கம்.’’ என்கிறார் சத்தியசீலன்.
உங்கள் ஆர்வத்துக்குத் தடை போட யாரையும் அனுமதிக்காதீர். நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை நடக்கும் இந்த பயிலரங்கம், மாணவர்களுக்கு மட்டுமில்லை; டிசைனிங் துறையில், கிரியேட்டிவிட்டியில் ஆர்வமுள்ள, வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் யாவருக்குமானது.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்...
source https://www.vikatan.com/automobile/motor/motor-vikatan-car-design-online-workshop-november-batch
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக