`மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது’ என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ சிறுதானியங்களுக்கு நன்றாகவே பொருந்தும். இன்று சூப்பர் ஃபுட் உணவு வகைகளில் முதலிடத்தில் இருந்து வருகின்றன சிறுதானியங்கள். பாரம்பர்யமாகவே முன்பெல்லாம் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வந்த சிறுதானியங்கள் கால மாற்றத்தால் மறக்கப்பட்டுவிட்டன. இன்று வாழ்வியல் நோய்களாகக் கருதப்படும் நீரிழிவு, உடல் பருமன், சத்துக் குறைபாடு போன்றவற்றுக்கு சிறுதானியங்களே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
எளிதான பயிர், குறைவான தண்ணீர், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர், குறைவான இடுபொருள்கள் என்று பல சாதகமான அம்சங்கள் சிறுதானியச் சாகுபடியில் இருப்பதால், பலரும் சிறுதானியச் சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். தமிழகத்தில் தர்மபுரி, கொல்லிமலை, ஜவ்வாது மலை, விருதுநகர், மதுரை போன்ற பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கேழ்வரகு, கம்பு, சோளம் தமிழகம் முழுவதுமே நன்றாக விளையும் திறன் உடையதால் இதன் சாகுபடியும் அதிகரித்து வருகிறது. சாமை, தினை, குதிரைவாலி, வரகும் பல இடங்களில் நன்றாகவே வளரும் இயல்புடையதாக இருக்கின்றன.
மானாவாரி பயிராக மட்டுமே வளர்ந்து வந்த சிறுதானியங்கள் இறவையிலும் சாகுபடி செய்ய ஏற்றவை. அதற்குத் தேர்வு செய்ய வேண்டிய சிறுதானிய ரகங்கள், அவற்றின் சாகுபடி முறைகள், மதிப்புக்கூட்டல் உள்ளிட்டவை குறித்து பசுமை விகடன், தர்மபுரி வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் `லாபம் தரும் சிறுதானிய சாகுபடியும் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பமும்’ இணையவழி கருத்தரங்கில் பேசப்பட உள்ளன. இந்த இணையவழி கருத்தரங்கு நவம்பர் 4-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
`சிறுதானிய ரகங்களும் அதன் சாகுபடி முறைகளும்’ என்ற தலைப்பில் மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் வன்னியராஜன் உரையாற்ற இருக்கிறார். இதில் கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு போன்ற தானியங்களில் எந்த ரகங்களில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பது பற்றிப் பேச இருக்கிறார். சிறுதானியத்தில் சேமியா, உப்புமா மிக்ஸ், பொங்கல் மிக்ஸ் போன்ற உடனடி (ரெடிமேட்) உணவுகளைத் தயார் செய்யும் விதம் குறித்துப் பேச இருக்கிறார் முனைவர் மீனாட்சி. பிழிதல் தொழில்நுட்பம் மூலம் மதிப்புக் கூட்டிய சிறுதானிய உணவுகள் தயாரிப்பு குறித்து முனைவர் இளமாறன் பேச இருக்கிறார்.
சிறுதானிய பிஸ்கேட், ஐஸ்க்ரீம், ரொட்டி போன்ற அடுமனை (பேக்கரி) உணவுகள் குறித்து உரையாற்ற இருக்கிறார் தர்மபுரி வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த முனைவர் வீரணன் அருண் கிரிதாரி. இன்னும் பல தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். சிறுதானிய மதிப்புக்கூட்டல் இன்று வளர்ந்து வரும் ஃபுட் இண்டஸ்ட்ரியாக உள்ளது. பல தொழில் முனைவோர்களும் இதில் இறங்கியுள்ளனர்.
ஒரு தொழிலாக சிறுதானிய மதிப்புக்கூட்டலை முன்னெடுப்படுபவர்களுக்கு இந்த இணைய வழி கருத்தரங்கு உதவி புரியும். இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்ற இருக்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் ஜவஹர்லால்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். இந்த லிங்க்கை https://bit.ly/34D2M6W க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளவும் அல்லது க்யூ. ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/pasumai-vikatan-conducts-free-online-training-on-profitable-millets-farming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக