விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி இம்மானுவேல் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி (வயது 55). இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் (எஸ்.எஸ்.ஐ) பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கூமாப்பட்டியில் உள்ள இம்மானுவேல் நடுத்தெருவைச் சேர்ந்த ஒரு நபரின் வீட்டுக்குள் நுழைந்த எஸ்.எஸ்.ஐ சப்பாணி, தூங்கிக்கொண்டிருந்த அந்த நபரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப் பெண் கத்திக்கூச்சலிடவும் ஒடிவந்த அவருடைய கணவர், என்ன நடந்தது என விசாரிக்கையில், எஸ்.எஸ்.ஐ சப்பாணி அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது எஸ்.எஸ்.ஐ சப்பாணி, ``நான் போலீஸ் உயர் அதிகாரி. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது" எனக் கூறி, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவர், கூமாப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் எஸ்.எஸ்.ஐ சப்பாணிக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/crime/case-filed-against-a-special-sub-inspector-of-police-on-the-charges-of-sexual-harassment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக