மேற்கு வங்கத்தில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் மூன்று பேர் கடத்திச் சென்றுக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட மாணவன் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தன்னுடைய நண்பர்களைச் சந்திப்பதற்காக வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றிருக்கிறார். பின்னர் வெகு நேரமாகியும் மாணவன் வீடு திரும்பவேயில்லை. தவிர மாணவனின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டலும் வர ஆரம்பித்தது.
இதனால் பதறிப்போன மாணவனின் பெற்றோர், தங்களின் மகனை காணவில்லை என கிருஷ்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பிறகுதான் மாணவன் கொலைசெய்யப்பட்ட போலீஸாருக்குத் தெரியவருகிறது. அதையடுத்து புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸார், மாணவனின் கொலையில் தொடர்பிருப்பதாக மூன்று மாணவர்களைக் கைதுசெய்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், ``கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள், கேமிங் லேப்டாப் வாங்குவதற்காகக் கடத்தப்பட்ட மாணவனின் குடும்பத்திடம் மூன்று லட்சம் ரூபாய் கேட்டனர். ஆனால், மாணவனின் குடும்பத்தார் அவர்கள் கேட்டதைக் கொடுக்காததால், மூன்று பேரும் அந்த மாணவனைக் கழுத்து நெரித்துக் கொன்றனர்.
அதேசமயம், மாணவனைக் கொல்வதற்கு முன் அவரின் கடைசி ஆசையைக் கேட்ட மூன்று பெரும், அவருக்கு ரசகுல்லா, குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்து கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளனர். பின்னர், மாணவனின் சடலத்தை ஒரு பையில் அடைத்து, ஒத்துக்குப் புறமான இடத்தில் அதை வீசிச் சென்றனர். அதையடுத்து, போலீஸார் மாணவனின் சடலத்தைக் கைப்பற்றினர்' என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் மீது சிறார் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/crime/8th-std-student-kidnapped-and-murdered-by-his-3-classmates-in-west-bengal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக