பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது.
இதில் ஷாருக்கான் மகள் சுஹானா கான், நடிகை ஸ்ரீதேவி மகள் குஷி கபூர், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இத்திருமண நிச்சயதார்த்ததில் அனுராக் காஷ்யப் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான இம்தியாஸ் அலி, தனிஷா சந்தோஷி மற்றும் மணமகள் ஆலியாவின் நெருங்கிய தோழிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் தனது மகள் மற்றும் தற்போதைய நண்பருடன் வந்திருந்தார். கல்கி கோச்லினும், அனுராக் காஷ்யப்பும் 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நான்கு ஆண்டுகள் இருவரும் சேர்ந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் இருவரும் பிரிகிறோம். ஆனால் விவாகரத்து செய்யவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். 2019ம் ஆண்டு விவாகரத்து குறித்து கல்கி கோச்லின் குறிப்பிட்டு இருந்தார். விவாகரத்துக்குப் பிறகு எனக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும், நான் விவாகரத்து பெற்றுள்ளேன், அதேசமயம் சிகிச்சையும் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
விவாகரத்துக்குப் பிறகு அவர் தற்போது புதிதாக ஒருவரை காதலிக்கிறார். அந்த நபருடன் அனுராக் காஷ்யப் மகள் திருமண நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டார். கல்கி சோச்லினும், அனுராக்கும் பிரிந்த பிறகும் இருவருக்கும் இடையே சுமுக உறவு இருந்து வருகிறது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என்று கல்கி தெரிவித்திருக்கிறார். அனுராக் அதற்கு முன்பாக திரைப்பட எடிட்டர் ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனுராக் காஷ்யப் - ஆர்த்தி பஜாஜ் இருவரின் மகள்தான் ஆலியா காஷ்யப். அனுராக் குறித்து பல அவதூறுகள் எழுந்த போது முன்னாள் மனைவிகள் இருவரும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
source https://cinema.vikatan.com/bollywood/anurag-kashyaps-daughters-engagement-was-attended-by-actress-kaki-koechlin-with-her-daughter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக