Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

பாலாரிஷ்ட தோஷம் தீர்க்கும் தணிகாசலன்... அறுபடை வீடுகள் அபூர்வ பரிகாரங்கள்!

பாலாரிஷ்ட தோஷம் தீர்க்கும் தணிகாசலன்!முருகப்பெருமான் சூரனை வதைத்த கோபம் தணிந்து அமர்ந்த இடமே திருத்தணிகை என்கின்றன புராணங்கள். மற்ற படைவீடுகளில் இல்லாத அம்சமாக... முருகப்பெருமான் இங்கே வேலாயுதத்துக்குப் பதிலாக ‘சக்தி ஹஸ்தம்’ எனப்படும் வஜ்ர வேலுடன் காட்சியளிக்கிறார்.

மேலும் இங்கு சூரசம்ஹாரம் நடைபெறு வதில்லை. அதற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. முருகனுக்கு இந்திரன் அளித்த சந்தனக்கல்லில் இழைக்கப்பட்ட சந்தனமே தினமும் முருகனுக்குச் சாத்தப்படும். இந்தச் சந்தனத்தில் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பார்கள்.இங்குள்ள சந்நிதியில் முருகனுக்கு எதிரே மயிலுக்குப் பதிலாக யானை உள்ளது.

திருத்தணி

இந்திரன் தன் மகள் தெய்வானைக்கு ஐராவதம் என்ற யானையைச் சீதனமாக இந்தத் திருத் தலத்தில்தான் வழங்கினான் என்பது ஐதிகம்.நம் துன்பங்களின் தீவிரத்தைத் தணித்த இன்ப வாழ்வை வரமாக அருளும் தலம் திருத்தணிகை. முக்கியமாக குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்ட தோஷம் நீங்கிட, திருத்தணி முருகனை வணங்கி வழிபட வேண்டும். 12 வயதுக்குள் இருக்கும் குழந்தை களுக்கு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் விலகவும், அவர்களின் பிறப்பில் கர்மபலன்கள் நீங்குவதற்கும் திருத்தணிக்குச்சென்று வழிபட வேண்டும். சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது குழந்தைகளின் ஜன்ம நட்சத்திர தினங்களிலோ திருத்தணிக்கு அழைத்துச்சென்று வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும்.



source https://www.vikatan.com/spiritual/temples/thiruthani-murugan-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக