புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வடுகப்பட்டி அழகு நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் லாரி டிரைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியிருந்தார்.
இந்த நிலையில், ரமேஷுக்கு திடீரென சொரியாசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படடுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
அதே நேரத்தில் நோய் பிரச்னையில் கடந்த சில மாதங்களாகவே வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், ரமேஷ் தவணைத் தொகையை சரிவர கட்ட முடியாமல் இருந்துள்ளார். இதையடுத்து, தற்போது வங்கி சார்பில் ரமேஷ் வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரமேஷ், கடந்த 24-ம் தேதி விராலிமலை- இனாம்குளத்தூர் சாலையில் பொருவாய் அருகே இருக்கும் புளியமரத்தடியில் எலிமருந்து (விஷம்) சாப்பிட்டதாக, தனது குடும்பத்தினரிடம் செல்போனில் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷை மீட்ட அவரது உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/crime/lorry-driver-ends-his-life-after-he-struggles-to-clear-the-home-loan-dues-in-pudukottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக