Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

"எனக்கு வயசுக்கு மீறின மெச்சூரிட்டி இருக்கு" - மனம் திறக்கும் கெளரி கிஷன்

திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிருது 'அடியே' திரைப்படம். '96' படத்தில் ஜானுவாக பலரது லைக்ஸை அள்ளிய கெளரி கிஷன், 'அடியே' படத்தில் செந்தாழினியாக நடித்திருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கெளரியை, 'அடியே' பட ப்ரோமோ பாடல் ஷூட்டிங்கில் சந்தித்தபோது நடந்த உரையாடல்

உங்களோட கரியர் ஸ்டார்ட் ஆனதுல இருந்தே நீங்க தமிழ், மலையாளம், தெலுங்குனு மூணு மொழிகளிலும் நடிச்சிட்டு இருக்கீங்க; எப்படி இருக்கு இந்த அனுபவம்..?

gouri kishan, கெளரி கிஷன்

" '96' படம் கிரியேட் பண்ணுன மேஜிக்தான் அதுக்கு காரணம். ஏன்னா, '96' படம் பேசுன எமோஷன் எல்லா மொழி பேசுறவங்களுக்கும் இருக்கிற எமோஷன். அதுனால, என்னையும் என் கேரக்டரையும் எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படம் ரீமேக் ஆகும் போது அதே கேரக்டரை எனக்கு கொடுத்தாங்க. அது ரொம்பவே ஸ்பெஷல்னு நினைக்கிறேன். அதே மாதிரி மலையாள சினிமா கன்ட்டென்ட்ல ரொம்பவே கவனமா இருப்பாங்க. ஒவ்வொரு கதாபாத்திரமும் ரொம்ப ஆழமாக இருக்கும். நடிக்கிறதுக்கும் ரொம்பவே சவாலாக இருக்கும். நான் நடிகையாக அறிமுகமானது தமிழ்ல தான். அதுனால தமிழ் சினிமா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என் தாய் மொழி மலையாளம்; அதுனால மலையாள சினிமா ஆடியன்ஸோட எதிர்பார்ப்பு என்னனு எனக்குத் தெரியும். எனக்கு புதுசா இருக்கிறது தெலுங்குதான். அந்த ஊர் ஆடியன்ஸோட எதிர்பார்ப்பு என்ன; அவங்களோட மொழினு எல்லாத்தையும் இப்போ கத்துக்கிட்டு இருக்கேன். இது வித்தியாசமாகவும் எனக்கு ரொம்ப பிடித்ததாகவும் இருக்கு."

படிப்பையும் நடிப்பையும் எப்படி பேலன்ஸ் பண்ணுனீங்க..?

gv prakash, gouri kishan

"அது ரொம்பவே கஷ்டமாக இருந்துச்சு. ஏன்னா, நான் +2 படிக்கும் போதுதான் '96' படத்துக்கு ஆடிஷன் போனேன். காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஷூட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. அப்போதுல இருந்து காலேஜ் முடிக்கிற வரைக்கும் தொடர்ந்து ஷூட்டிங்கும் இருந்தனால, நான் பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட்ல தான் படிச்சிட்டு இருந்தேன். ஷூட்டிங் முடிச்சிட்டு எக்ஸாம் எழுத போவேன். அந்த சமயம் எனக்கு ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு. இப்போ அதை நினைச்சு பார்க்கும் போது ஜாலியாக இருக்கு. எனக்கு நடிக்கிறது மாதிரியே படிக்கிறதும் ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிடிச்சுத்தான் ஜர்னலிசம் எடுத்து படிச்சேன்."

உங்களுடைய வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் போது எப்படி இருக்கும்..?

gouri kishan, கெளரி கிஷன்

"சின்ன வயசுல இருந்தே எனக்கு வயதுக்கு மீறிய மெச்சூரிட்டி இருக்குன்னு எல்லாரும் சொல்லுவாங்க. அந்தளவுக்கு என்னை என் அப்பா - அம்மா எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க. அதுனால, என் வயதுக்கு மீறிய ஒரு கதாபாத்திரத்தையோ, கதையையோ என்கிட்ட சொல்லும் போது அதை என்னால புரிஞ்சுக்க முடியும். அந்த கதாபாத்திரம் ஒரு சூழ்நிலையை எப்படி கையாளும்னு என்னால யோசிக்க முடியும். 'அடியே' படத்துல கூட நான் ஜி.வி.பிரகாஷ் குமாரோட மனைவியாகத்தான் நடிச்சிருக்கேன். அந்த கேரக்டரோட எமோஷனை புரிஞ்சுக்கிட்டா அந்த கதாபாத்திரமாக நடிக்கிறது ஈசியாகத்தான் இருக்கு. இப்படி நாம வேற ஒரு ஆளா மாறுவது சினிமாவில் தானே நடக்கும். அதுனால அதை ரொம்ப என்ஜாய் பண்ணி பண்றேன்.

'அடியே' படத்துக்கு அப்பறம் இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு நிறைய வரும்னு நினைக்கிறேன். ஏன்னா, இப்போ வரைக்கும் என்னை எல்லாரும் '96' படத்துல வந்த ஸ்கூல் பொண்ணு ஜானுவாக தான் பார்க்கிறாங்க. அது எனக்கு சந்தோஷம்தான். இருந்தாலும் ஒரு நடிகையாக என்னால இந்த மாதிரியான வேற, வேற கதாபாத்திரங்கள் பண்ண முடியும்னு நிரூபிக்கணும். காதல் படங்கள் மட்டும் இல்லாமல், வேற வேற ஜானர் படங்களும் பண்ணணும். த்ரில்லர், பயோபிக், ஸ்போர்ட்ஸ்னு நிறைய ஜானர்கள் ட்ரை பண்ணணும்னு ஆசை இருக்கு. நான் எந்த ஸ்போர்ட்ஸும் விளையாடுனது இல்லை. ஆனால், படத்துக்காக அப்படி ஒரு விஷயத்தை கத்துக்கிட்டு நடிக்கணும்னு ரொம்பவே ஆசை."



source https://cinema.vikatan.com/kollywood/actress-gouri-kishan-interview-for-adiyae-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக