திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
அதிமுக-வின் உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஒருங்கிணைப்பாளர்களாக இருவரும் பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் உள்ளது என குற்றம்சாட்டியதோடு அதனை கண்டித்து டிசம்பர் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.
இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் காரணமாக அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற இருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/news/tamil-news-today-17-12-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக