Ad

திங்கள், 6 டிசம்பர், 2021

கோவை: `வீட்டில் பிரசவம்; உயிரிழந்த குழந்தை!' - தாய் மீது வழக்கு பதிவு

கோவை உப்புக்கார வீதி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். நகைப் பட்டறையில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி பெயர் புண்ணியவதி. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், புண்ணியவதி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

கர்ப்பம்

நான்காவது குழந்தை என்பதால், புண்ணியவதி மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புண்ணியவதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் பிரசவ வலி ஏற்படவே, அவர் குடும்பத்தினர் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்திருக்கின்றனர்.

Also Read: கோவை: லிவிங் டுகெதர் உறவில் தகராறு?! - காதலன்மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திய காதலி

அதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை. அதேபோல, பிரசவத்தில் ஏற்பட்ட குறையால் தாய், குழந்தை இருவரும் திடீரென மயங்கிவிட்டனர்.

கோவை அரசு மருத்துவமனை

இதையடுத்து, இருவரையும் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. சரியாக பிரசவம் பார்க்காததே, குழந்தை மரணத்துக்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடைவீதி காவல் நிலையம்

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, குழந்தைக்கு உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவது (IPC - 315) பிரிவின் கீழ் கடை வீதி போலீஸார் புண்ணியவதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/police-filed-fir-against-woman-over-pregnancy-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக