Ad

சனி, 11 டிசம்பர், 2021

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குறித்து அவதூறு! - ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரைத் தேடும் போலீஸ்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாப்பா சுப்ரமணியன். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். இது திருவாரூர் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பா சுப்ரமணியன்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாப்பா சுப்ரமணியன். இவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான அதிமுக பிரமுகராக இருந்த இவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு நேரடியான அறிமுகத்தில் இருந்தார். இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து, மீண்டும் அதிமுக-வுக்கு திரும்பி வந்தார்.

இதனால் இவரது அரசியல் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது. ஆனால் நாளடைவில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டு, அதிமுக-வில் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயன்றார். குடவாசல் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவராகப் பொறுப்பு வகித்தார். தற்போது, மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பாப்பா சுப்ரமணியன் பொறுப்பு வகித்துவருகிறார். இந்நிலையில், குடவாசல் காவல் நிலையத்தில் இவர் அளித்த புகார் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பா சுப்ரமணியன்

தன்மீது பெரும்பண்ணையூர் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவரும், பெரும்பண்ணையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான நடராஜன் என்பவர் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்விதத்திலும், இரு வேறு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பல வாட்ஸ்அப் குழுக்களில் அவதூறுச் செய்தி பரப்பியதாகக் கூறி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் கோவில்பத்து நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்யத் தேடிவருகிறார்கள். நடராஜன் தலைமறைவாகியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/admk-former-mla-complaint-against-a-person-for-spreading-false-news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக