மாரடோனா, அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரராகவும், அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் மேலாளராகவும் இருந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் 25 -ம் தேதி மாரடோனா காலமானார்.
கால்பந்தாட்ட வீரர், மாரடோனாவின் பொருள்களை துபாயில், ஒரு தனியார் நிறுவனத்தில் வைத்திருந்தனர். சமீபத்தில், மாரடோனாவின் ஹப்லாட் (Hublot) வாட்ச்சைக் காணவில்லை எனும் புகார் எழுந்தது. மாரடோனாவின் ஹப்லாட் வாட்சின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு, இந்தத் திருட்டு குறித்த செய்தியை விசாரித்துவந்த துபாய் போலீஸார், தற்போது திருடனைக் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
Also Read: மரடோனா... புறக்கணிக்கப்பட்டவர்களின் நாயகன்!
மாரடோனாவின் ஹப்லாட் வாட்ச்சைத் திருடியவர், வாஸித் ஹுசைன் என்பவர். இவர், துபாயில் மாரடோனாவின் பொருள்கள் வைத்திருந்த தனியார் நிறுவனத்தில், காப்பாளராக வேலை செய்துவந்தவர். இவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம், தன் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறிவிட்டு, விடுப்பு எடுத்துவிட்டு அஸ்ஸாம் வந்திருக்கிறார்.
மேலும், வாட்ச் காணவில்லை என்று விசாரித்துவந்த துபாய் போலீஸார் வாஸித் ஹுசைன் திருடியிருக்கலாம் எனச் சந்தேகித்து, அஸ்ஸாம் மாநில போலீஸாருடன் இணைந்து, இன்று அதிகாலை 4 மணி அளவில், வாஸித் ஹுசைனைக் கைதுசெய்தனர்.
பின்பு, வாஸித் ஹுசைனிடமிருந்து கைப்பற்றபட்ட ஹப்லாட் வாட்சைத் திரும்பவும் அதே தனியார் நிறுவனத்தில் வைக்கப்போவதாகவும், அஸ்ஸாம் மாநிலத்தின் டி.ஜி.பி பாஸ்கர் ஜோதி தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/international/football-legend-diego-maradonas-watch-stolen-in-dubai-recovered-from-assam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக