கலால் வரி குறைப்பு...இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணையம் செய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் டீசல் விலையும் சதமடித்தது. இதன் காரணமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 5.26 குறைந்து ரூபாய்.101.40-க்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 11.16 குறைந்து ரூபாய் 91.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-04-11-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக