மகாராஷ்டிரா மாநிலம், அஹமத் நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், தீ நாலாபுறமும் பரவியதால் உள்ளே சிகிச்சைபெற்று வந்த நோயாளிகள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து குறித்துத் தகவலறிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறை வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக, மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்தின் போது, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 20 நோயாளிகளில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Also Read: தைவான்: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... 46 பேரை பலி கொண்ட சோகம்
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் சம்பவத்தில் பலர் காயம் அடைந்திருக்கின்றனர். தீ விபத்தால் மருத்துவமனை வளாகம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸ்லே கூறுகையில், ``மருத்துவமனையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 10 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்த அனைவரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது" என்றார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி காந்தல் கூறுகையில், ``தீ விபத்தில் 7 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது" என்றார்.
source https://www.vikatan.com/news/india/10-covid-patients-died-in-a-fire-accident-in-maharashtra-government-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக