`ஊரடங்கு நீட்டிப்பா..?!’
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல்வராக இந்த மாதம் பொறுப்பெற்ற ஸ்டாலின், கடந்த 10 -ம் தேதி முதல் மாநிலம் தழுவிய ஊரடங்கை 14 நாட்களுக்கு அமல் படுத்தினார். என்றாலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்க, அதில் சில தளர்வுகள் நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. எனினும் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 35,000 -ஐ கடந்துள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.
ஊரடங்கு, வரும் 24 -ம் தேதி அதிகாலையுடன் நிறைவடையும் நிலையில், இன்று ஸ்டாலின் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கின் முடிவில் பாதிப்பு குறைய தொடங்கி இருந்தால், சில தளர்வுகள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இன்றைய ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. கூடுதலாக, முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் குழுவுடனும் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
source https://www.vikatan.com/news/general-news/22-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக